×

இன்று நள்ளிரவு முதல் 16ம் தேதி வரை கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு 300 போலீசார் பாதுகாப்பு

அண்ணாநகர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று நள்ளிரவு முதல் 16ம் தேதி வரை சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனைக்கு வருகிறது. இந்த பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 3 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சிறப்பு சந்தையில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் 300க்கும் மேற்பட்ட போலீசார் இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே கோயம்பேடு துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்படி, மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் பைனாக்குலர் மூலம் இன்று நள்ளிரவு முதல் கண்காணிக்க உள்ளனர். மேலும் மாறுவேடத்தில் ரோந்து பணிகளிலும் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்று நள்ளிரவு முதல் 16ம் தேதி வரை கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு 300 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,special ,Annanagar ,Pongal festival ,Koyambedu market ,Villupuram ,Cuddalore ,Salem ,Puducherry ,Koyambedu special market ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிப்பு