×

பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை செலவு செய்த ரயில்வே

புதுடெல்லி: ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஜனவரி 5ம் தேதி வரையிலான இந்திய ரயில்வேயின் சமீபத்திய செலவின அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், ‘‘இந்திய ரயில்வேக்கு 2024-25ம் நிதியாண்டில் பட்ஜெட்டில் ரூ.2,52000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் 9 மாதங்களில் ரூ.1,92,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதியில் 76 சதவீதமாகும்.

பட்ஜெட்டில் ரயில்களுக்காக ரூ.50,903 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஜனவரி 5ம் தேதிக்குள் ரூ.40,367கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ரயில்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 79சதவீதமாகும். பாதுகாப்பு தொடர்பாக பணிகளுக்காக ரூ.28,281கோடி செலவிடப்பட்டுள்ளது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை செலவு செய்த ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Railways ,New Delhi ,Union Railway Ministry ,Indian Railways ,Dinakaran ,
× RELATED தட்கல் முன்பதிவு நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி செயலிழந்தது: பயனர்கள் ஆவேசம்