செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் 2.1.2025 முதல் 13.1.2025 வரை பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் அறிவிக்கப்படும் நாள் முதல் 13.1.2025 வரை காலை 9 முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தின் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ அல்லது இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட கட்டுபாட்டு அறை எண் 044-2742 7412 044-2742 7414 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 94983 41045, துணைப்பதிவாளர் (பொவித) – 95667 56387, வட்ட வழங்கல் அலுவலர் செங்கல்பட்டு 99411 83641, வட்ட வழங்கல் அலுவலர் மதுராந்தகம் – 73976 30313, வட்ட வழங்கல் அலுவலர் திருக்கழுக்குன்றம் – 98659 84506, வட்ட வழங்கல் அலுவலர் திருப்போரூர் 72004 53440, வட்ட வழங்கல் அலுவலர் வண்டலூர் – 96297 49023, வட்ட வழங்கல் அலுவலர் செய்யூர் 97882 64833 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு appeared first on Dinakaran.