×

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு

அண்ணாநகர்: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் சேலம், அரியலூர், பண்ருட்டி, கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வத்தல், வள்ளி கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் பிடி கிழங்கு, கருணை கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி, தோரை ஆகியவை வந்து குவிந்துள்ளன. இதன்காரணமாக மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து சிறு, மொத்த வியாபாரிகள் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘’பொங்கல் பண்டிகை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு இன்று காலை சீசன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த 4 நாட்களாக அதே விலையில் நீடித்து வருகிறது’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீசன் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Pongal festival ,
× RELATED பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு...