- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ரவி
- அஇஅதிமுக
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- பெரம்பூர்
- சேகர்பாபு
- கவர்னர்
- அயனாவரம் வெள்ளாளர் தெரு
- வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி
- அன்னை சத்யநகர்
- துறைமுக சட்டசபை
பெரம்பூர்: அதிமுகவின் பி டீம்தான் தமிழக கவர்னர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் வெள்ளாளர் தெரு, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் இன்று நடைபயணம் மேற்கொண்டு அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டனர். அப்போது மேயர் பிரியா கூறியதாவது; முதலமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம்.
மின்விளக்கு சாலையை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைக்கின்றனர். பூங்கா, இறகுப்பந்து கூடம், அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு அம்மா உணவகத்துக்கு கூடுதலாக என்ன தேவை இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தோம். ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, ‘’சென்னையில் எங்கும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கவில்லை. அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார். ஆளுநர் பேசியதை தவறு இல்லையென எடப்பாடி பேசுவது எதிர்பார்த்த ஒன்றுதான்’’ என்றார்.
The post அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.