×

பாரில் சட்டவிரோத மது விற்பனை மேலாளர் கைது

அருமனை, ஜன.7 : அருமனை அருகே பளுகல் பகுதியில் உள்ள தனியார் பாரில் சட்டவிரோதமாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பளுகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பாரில் சட்ட விரோதமாகவும், நேரத்தை கடந்தும் மது விற்ற பார் மேலாளர் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த ரகு (50) என்பரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post பாரில் சட்டவிரோத மது விற்பனை மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Palugal ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே கேரளாவில் இருந்து...