×

ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முழக்கங்களை எழுப்பியதால் சபாநாயகர் அதிமுகவினரை வெளியேற்றினார். அவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் ஆளுநரால் உரையாற்றுகின்ற இந்த நேரத்தில் அவர் உரையாற்ற முடியாமல் வெளியேறிய பிறகு சபாநாயகர் உரையாற்றுகின்றார். இது ஆளுநர் உரையல்ல. சபாநாயகர் உரை. அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகளையும், பல பள்ளிகளையும் நாங்கள் திறந்தோம். அதனால் கல்வி வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அரசுக்கு எதிராக அல்ல, மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அரசாங்கம் இந்த வழக்கை தட்டிக்கழிக்க பார்க்கிறது. இனி இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில் அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor ,Edappadi Palaniswami ,Chennai ,Speaker ,AIADMK ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED வருமானத்தை குறைத்து கணக்கு...