×

ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் அதிரடி கைது

சிவகாசி, ஜன.9: சிவகாசியில் கத்தியுடன் சுற்றிதிரிந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகாசி மணிநகர் பகுதியில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் காசியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிவகாசி தெற்கு தெருவை சேர்ந்த ஹரிபிரியன்(22), செண்பகராஜ்(25), மகேந்திரன்(25) ஆகியோர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் சுற்றி திரிந்தனர். அதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Town Sub Inspector ,Kashiammal ,Maninagar ,Haripriyaan ,Senpakaraj ,Mahendran ,Sivakasi South Street ,Dinakaran ,
× RELATED சிவகாசி பகுதியில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்