- தேவதானப்பட்டி
- ரசிமலை
- மஞ்சலரு அணை
- தேவதானப்பட்டி டவுன் பஞ்சாயத்து
- மேற்குத்தொடர்ச்சி
- மஞ்சளாறு அணை…
- தின மலர்
தேவதானப்பட்டி, ஜன.9: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு அருகில் உள்ள ராசி மலை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராசிமலை என்னும் பழங்குடியினர் வாழும் கிராமம் மஞ்சளாறு அணையை ஒட்டி மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இபக்குதியில் நேற்று, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி ராமையா, துணைச் சேர்மன் நிபந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது துறையின் கீழ் செயல்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.
இம்முகாமில் அனைத்து துறை சார்பில் ரூ.2 கோடியே 76 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் ராசி மலை கிராமத்தில் தேவைப்படும் தெரு விளக்குகள், சாக்கடை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, பெரியகுளம் கோட்டாட்சியர் ரஜத்பீடன், பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டியன், தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post தேவதானப்பட்டி அருகே ரூ.2.76 கோடியில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.