×

மழை பாதிப்புக்கு நிதி கேட்டால் ஒன்றிய அரசு ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கிறது: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: மழை பாதிப்புக்கு நிதி கேட்டால் ரெய்டு நடத்தி ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு, கண்காட்சியை தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது பெய்த மழையில் நடவு செய்யப்பட்ட வயில்களில் இளம் பயிர்கள் பாதிப்பு, நெல் பயிர்கள் அழுகி பாதிப்பு போன்று 4 வகையான அளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும். ஒன்றிய அரசு நாம் கேட்ட நிவாரணம் வழங்கவில்லை. இருந்தாலும் தமிழக அரசே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. நாம் மழை பாதிப்புக்கு நிதி கேட்டால் அதற்கு ஒன்றிய அரசு இதுபோல் ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post மழை பாதிப்புக்கு நிதி கேட்டால் ஒன்றிய அரசு ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுக்கிறது: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister ,MRK Panneerselvam ,Thanjavur ,National Institute of Food Technology, Entrepreneurship and Management ,Thanjavur… ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்பு கரும்புகள்...