×

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

 

திண்டுக்கல், ஜன. 3: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் தாட்கோ சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையினை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Dindigul ,TNPSC ,TADCO ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு கூட்டம்