×

புத்தக கண்காட்சிக்கு லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

 

திருவாரூர், ஜன. 7: திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சிக்கு உரிய லோகோ வடிவமைப்பிற்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துகலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 3வது புத்தக கண்காட்சி வரும் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 2ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் லோகோ வடிவமைப்பு போட்டி மற்றும் கருபொருள் (ஸ்லோகன்) வெளியிட பொது மக்களிடம் விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். நுழைவுக்கட்டணம் இல்லை. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் tvrbookfair2025@gmail.com. விண்ணப்பங்கள் வரும் 15ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும். லோகோ மற்றும் கருப்பொருள் ஆகியன புத்தகக்கண்காட்சி தொடர்புடையதாக இருக்க வேண்டும். லோகோ உயர் தெளிவுத்திறன் 600 டிபிஐ-க்குள் இருக்க வேண்டும். கருப்பொருள் இரண்டு வரிக்குள் இருக்க வேண்டும். பரிசுத்தொகை லோகோவிற்கு ரூ.10 ஆயிரமும், கருப்பொருளிற்கு ரூ.5 ஆயிரமும் ஆகும். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து லோகோ மற்றும் கருப்பொருள் மீதும் திருவாரூர் மாவட்ட நிருவாகத்திற்கு முழு உரிமை இருக்கும். வெற்றியாளர்கள் தேர்வு செய்வதில் மாவட்ட நிருவாகத்தின் முடிவே இறுதி முடிவாகும் என்றார்.

The post புத்தக கண்காட்சிக்கு லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvaroor District Administration ,Collector Saru ,
× RELATED மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் மீது வழக்கு..!!