×

பள்ளபட்டியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது

அரவக்குறிச்சி, ஜன. 1: பள்ளப்பட்டியில் வீட்டின் முன்பு பைக் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 11ம் தேதி, வீட்டின் முன்பு நிறுத்திய டூ வீலர் திருடுபோனதாக புகார் அளித்த நிலையில், இருவர் கைது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி கிழக்கு தெரு பகுதியில் அகமது மற்றும் முஸ்தாக் அலி இருவரும் தங்கள் வீட்டின் வாசலில் கடந்த 11ம் தேதி, இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தர். பின்னர் வேலைக்கு செல்வதற்காக தனது வாகனத்தை பார்த்தபோது இருவரின் இருசக்கர வாகனமும் காணவில்லை. இருவரும் அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் வாகனம் கிடைக்கவில்லை.

புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் பள்ளப்பட்டி கருத்தப்பா தெருவை சேர்ந்த சர்புதீன் (52) மற்றும் பள்ளப்பட்டி செல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த அல்தாப் உசேன் (24) ஆகிய இருவரும் இருவருன் இரு சக்கர வாகனத்தையும் திருடிச்ன் சென்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதேபோல் சர்புதீன். அல்தாப் உசேன் இருவரும் வேறு எந்தெந்த பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

The post பள்ளபட்டியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallapatti ,Aravakurichi ,Karur ,Aravakurichi… ,
× RELATED அரவக்குறிச்சியில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு