குளித்தலை, டிச.5: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஜனவரி 6,7 கம்பி வட ஊர்தி மாதிரி ஒத்திகை பயிற்சி நேரத்தில் சேவை நிறுத்தப்படும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்,கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ள சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தனகிரி ஈஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை இரத்தினகிரிஸ்வரர் கோயிலில் மாவட்ட ஆட்சியர் அறிக்கையின்படி கம்பி வட ஊர்தி மாதிரி ஒத்திகை பயிற்சிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் ஜனவரி 6, 7 தேதிகளில் மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது ஒத்திகை பயிற்சியின் போது கம்பி வட ஊர்தி சேவை நிறுத்தப்படும். மேலும் ஒத்திகைபயிற்சி முடிவடைந்தவுடன் தொடர்ந்து கம்பி வட உறுதி வழக்கம்போல் செயல்படும். அதனால் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் பக்தர்களுக்கு அந்த நேரத்தில் மட்டும் அனுமதி கிடையாது.
The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஒத்திகை பயிற்சி நேரத்தில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் appeared first on Dinakaran.