- மக்கள் குறை விடுதலைக் கூட்டம்
- கரூர்
- மக்கள் குறை தீர்க்கும் நாள்
- கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- பாப்பக்காபட்டி
- கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம்
- தின மலர்
கரூர், ஜன. 7: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் கிருஷணராயபுரம் வட்டம் பாப்பக்காபட்டியை சேர்ந்த சிலர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: பாப்பக்காபட்டியில் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த சமூகத்தினர் பயன்படுத்தும் மயானத்துக்கு செல்லும் பாதை ஒரு சிலர் ஆக்ரமித்துள்ளனர். எனவே, எங்களின் நலன் கருதி மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் உடனடியாக அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மயானத்திற்கு சாலை வசதி செய்தி தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.