×

தொண்டியில் அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள்

 

தொண்டி,ஜன.1: தொண்டியில் அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் நியமிக்க கோரியும், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் விதிமுறைகளை மீறி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தொண்டி எஸ்.எஸ்.ஐ. கதிர்வேல் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் தொண்டியை சேர்ந்த சிக்கந்தர், முகம்மது அப்சன், நத்தர்சித்திக், முகம்மது, அப்துல் மஜீத், அப்துல் நெய்னா முகம்மது, பீர் முகமது உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post தொண்டியில் அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Thondi police ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது