சிவகங்கை, ஜன.1: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்டது சிறியூர் கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மறவமங்கலத்தில் இருந்து சிறியூர் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து உள்ளதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் இவ்வழியே சென்று வந்த அரசு பஸ் வசதி பேருந்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள்அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியாது சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைத்து அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post சாலையை சீரமைத்து பஸ் இயக்க கோரி மனு appeared first on Dinakaran.