×

கார் மோதி மின்கம்பம் உடைந்தது: இன்ஜினியர் உயிர் தப்பினார்

திருவொற்றியூர்: கார் மோதி மின்கம்பம் உடைந்ததில் இன்ஜினியர் உயிர் தப்பினார். சென்னை திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு காரில் வந்துள்ளார். அப்போது திடீரென அந்த கார் அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி சேதம் அடைந்தது. மேலும் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து காரின் மீது சாய்ந்துவிழுந்தது. இதை பார்த்ததும் அப்பகுதியினர் ஓடிவந்து காருக்குள் சிக்கியிருந்த இன்ஜினியரை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

மின் வயரில் மின் கசிவு ஏற்படாததால் இன்ஜினியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து ஜோதி நகர் மின்வாரிய பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் உடனடியாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள், சாத்தாங்காடு போலீசார் வந்து மின்கம்பம் மீது மோதி நின்ற காரை எடுத்து மின் கம்பத்தை சரி செய்தனர். இதன்காரணமாக சுமார் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கார் மோதி மின்கம்பம் உடைந்தது: இன்ஜினியர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur ,Balakrishna Nagar ,Chennai ,
× RELATED அதிவேக கார் மோதி மின் கம்பம் சாய்ந்தது