×

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த வைரஸ் பெரும்பாலும் குழந்தைகள், பெரியவர்களை தாக்கும், அது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை HMPVன் அறிகுறிகளாகும்.

The post சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...