×

ஆருத்ரா தரிசனம் திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25ம் அறிவிக்கப்பட்ட ஈடு செய்யும் பணிநாள் பிப்ரவரி 2ம் தேதிக்கு மாற்றம்

ராமநாதபுரம்: பொதுதுறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.154 பொது(பல்வகை)த் துறை நாள்: 03.09.2020-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 13.01.2025 அன்று திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் “உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 25.01.2025 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசு 04.01.2025 அன்றைய செய்தி வெளியீட்டில் 14.01.2025 செவ்வாய் கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025 மற்றும் 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் அதற்கிடைப்பட்ட நாளான 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25.01.2025 ஈடு செய்யும் பணிநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக 01.02.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 13.01.2025 திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஆருத்ரா தரிசனம் திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25ம் அறிவிக்கப்பட்ட ஈடு செய்யும் பணிநாள் பிப்ரவரி 2ம் தேதிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Aruthra Darshanam Festival ,Ramanathapuram ,Arulmigu Srimangalanathaswamy Temple ,Uthirakosamangai ,Keezhakkarai taluk ,Ramanathapuram district ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா...