×

திருக்கோவிலூர் அருகே சூதாட்ட கும்பல் அதிரடி கைது

*பணம், பைக், செல்போன்கள் பறிமுதல்

திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மொகலார் காப்பு காட்டுப்பகுதியில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கடந்த ஒரு வாரமாக டிஎஸ்பி பார்த்திபன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகர், நரசிம்ம ஜோதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மொகலார் ஏரிக்கரை தைலம் தோப்பு அருகில் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல் சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 8 நபர்களில் 5 பேரை மடக்கி பிடித்தனர்.

மற்ற 3 பேரும் தப்பியோடி விட்டனர். பின்னர் அங்கிருந்த 5 பைக்குகள், 6 செல்போன்கள்,ரூ.81 ஆயிரத்து 200 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், திருக்கோவிலூர் அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனகோடி மகன் சரத்குமார் (28), சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத் மகன் ராஜேஷ் (36), எம்.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த வையாபுரி மகன் சேகர் (24), ஆறுமுகம் மகன் குமார் (45), பெரியானூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (35), ஜெகநாதன் மகன் மணிகண்டன், குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த வீரப்பன், வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரகோத்து மகன் அசோக் ஆகிய 8 பேர் சேர்ந்து பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

பின்னர் திருக்கோவிலூர் போலீசார், 8 பேர் மீது வழக்குப்பதிந்து சரத்குமார், ராஜேஷ், சேகர், குமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து மற்ற 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மொகலார் பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சூதாட்ட கும்பல் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

The post திருக்கோவிலூர் அருகே சூதாட்ட கும்பல் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Kallakurichi ,District ,Mogalar Reserve forest ,Tirukovilur ,DSP ,Parthiban ,Tirukovilur Police ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த...