×

திமுக சார்பில் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார்

 

விருதுநகர், டிச.31: விருதுநகர் நகராட்சி பூங்காவில் திமுக விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 6 முதல் 14 வயது வரையிலான 55 மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டி 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சாத்தூர் மாணவர் யோகேஷ்குமார்(10) பெற்றார்.

ஸ்குவாட் பிரிவில் முதல் பரிசு ஹர்சிகா(12), ஹரிகிருஷ்ணா(11), 2ம் பரிசு ஹாருன்(7) பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் பரிசு கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் மாதவன் செய்திருந்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், மாநில பொதுக்குழு மதியழகன், நகர்மன்ற செயலாளர் தனபாலன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : District Skating Tournament ,Dimuka ,Virudhunagar ,Dimuka Virudhunagar Northern District Sports Development Team ,Virudhunagar Municipal Park ,MLA ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில்...