×

கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ₹16.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிவடைந்த உயர் மட்ட பாலம் எம்எல்ஏ ஆய்வு

கலசப்பாக்கம், டிச.30: கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்கள் செய்யாற்றின் கரையோரம் உள்ளதால் மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது பொதுமக்கள் மழைக்காலங்களில் அவதிப்பட்டு வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன்படி குருவிமலை, பழங்கோயில், பூவாம்பட்டு, கீழ் தாமரைப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் செய்யாற்றின் குறுக்கே ரூ. 65.09 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீழ் தாமரைப்பாக்கம் மற்றும் தேன் மகாதேவமங்கலம் மாதிமங்கலம் கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.16.05 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. இந்நிலையில் உயர்மட்ட பாலத்தை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளார்.

செய்யாற்றின் கரையோரம் 4 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 33 கிராமங்களை சேர்ந்த 2.50 லட்சம் பொதுமக்கள் பயனடைய உள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ₹16.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடிவடைந்த உயர் மட்ட பாலம் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Cheyyar ,Kalasappakkam ,Minister ,E.V. Velu ,DMK ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயிகள், டிரைவர்கள் சாலை...