×

மதுபோதையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது அணைக்கட்டு அருகே சொத்து தகராறு

அணைக்கட்டு, ஜன.4: அணைக்கட்டு அருகே சொத்து தகராறில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஆயிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(47). லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா. இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். இவர்களது தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை வெங்கடேசன்(61) மூத்த மகளான சரிதாவின் கவனிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், வெங்கடேசனுக்கு மகன் இல்லாத காரணத்தால் சொத்துக்களை தனது மனைவி பெயரில் எழுதி கொடுக்க கோரி அரிகிருஷ்ணன் அவ்வபோது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த அரிகிருஷ்ணன் சொத்துக்களை எழுதிகொடுக்க கோரி வெங்கடேசனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் சொத்துக்களை வெங்கடேசன் எழுதி கொடுக்க மறுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் கத்தியால் மாமனார் வெங்கடேசனின் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த வெங்கடேசன் வாலி தாங்க முடியாமல் அங்கேயே அலறிதுடித்து சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரியகுமாரி வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணனை கைது செய்தார். சொத்து தகராறில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மதுபோதையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது அணைக்கட்டு அருகே சொத்து தகராறு appeared first on Dinakaran.

Tags : Anicut ,Arikrishnan ,Ayrangulam ,Kenganallur ,Anicut, Vellore district ,Dinakaran ,
× RELATED அணைக்கட்டில் கூலி ஆட்கள்...