×

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் முதியோர் காப்பக புதிய கட்டிடம்’

தூத்துக்குடி,டிச.30: தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் முதியோர் காப்பகத்தின் புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் அன்பு உள்ளங்கள் என்ற  பெயரில் ஆதரவற்ற முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உள்ளது. இங்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. இல்ல நிர்வாகி விஜயா சத்தியசாமுவேல் தலைமை வகித்தார். செயலாளர் தங்கதீபா வரவேற்றார். குருவானவர் ஜஸ்டின் ஆரம்ப ஜெபம் செய்தார்.

இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு முதியோர் இல்ல புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசியதாவது:
கடந்த 1992ம் ஆண்டு சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்ட இந்த அன்பு உள்ளங்கள் முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகம் பலருடைய பங்களிப்பால் இன்று பலருக்கும் நன்மை கிடைக்கும் இடமாக அமைந்துள்ளது. சமூக சேவை என்பது தன்னால் முடிந்த உதவிகளை கொண்டு மற்றவர்களுக்கு உதவுவது தான். அதிலும் முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவுவது சாதாரண விஷயம் அல்ல. பொதுவாகவே சமூகசேவையில் இருப்பவர்கள் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும். பல்வேறு தடைகளையும் தாண்டி போராடி நடத்தும் இந்த இல்லம் மேலும் பல விரிவாக்கத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்’ என்றார்.

விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா
ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜெயராஜ், சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் வரலட்சுமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகேபரியல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோட் மகாராஜா, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக தொழிலாளர் அணி மொபட்ராஜன், தொண்டரணி சைமன், இளைஞர் அணி சண்முகநாராயணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், லிங்கராஜா மற்றும் கருணா, மணி, சங்கு குழி சங்க தலைவர் இசக்கிமுத்து, மரம்வரம் அறக்கட்டளை இயக்குநர் ராமன் உள்ளிட்ட பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் முதியோர் காப்பக புதிய கட்டிடம்’ appeared first on Dinakaran.

Tags : Kootampuli ,Thoothukudi ,Kanimozhi ,Anbu ,Ullang ,Kootampuli, Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் புதிய சாலைப்பணி