×

நான் பிஜேபி இல்லை: இல.கணேசன் பேட்டி

ஈரோடு: ‘அண்ணாமலை என்பது பிஜேபி, நான் பிஜேபி இல்லை’ என நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று பாரததர்ஷன் எனும் குடும்ப சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரத நாட்டின் ஒற்றுமையை அறிவு பூர்வமாக மட்டுமின்றி அனுபவ ரீதியாகயாகவும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று முக்கிய பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து, அனுபவ ரீதியாக ஒரே நாடு எனும் உணர்வு ஏற்படவேண்டும் எனும் நோக்கிலேயே இந்த பாரததர்ஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு, பலமூட்டும் வகையிலான சில கருத்துகளை தெரிவித்துள்ளேன்.

நாகாலாந்தில் ஆளுநர் பணி நன்றாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விஷயம் வேறுபடும். பத்திரிக்கையில் செய்தி வரும்போதுதான் அங்கு பிரச்னை இருப்பது தெரியவரும். ஆனால், நாகலாந்து அமைதியான மாநிலமாகவே செயல்பட்டு வருகிறது’’ என்றார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்த கேள்விக்கு, ‘‘அண்ணாமலை என்பது பிஜேபி; நான் பிஜேபி இல்லை’’ என கூறினார்.

The post நான் பிஜேபி இல்லை: இல.கணேசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Ganeson ,Erode ,Nagaland ,Governor No. Ganesan ,Bharatdarshan ,Ganesan ,
× RELATED பள்ளிக்குள் நுழைந்து மிரட்டல் வழக்கில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி கைது