×

கட்டுமான தொழிலாளர்களுக்கு ₹5 ஆயிரம், பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் சிஐடியு கோரிக்கை

நாகர்கோவில், டிச.28: குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் (சிஐடியு) அதன் செயலாளர் பெருமாள், பொருளாளர் றசல் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய அட்டை பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டு நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்பு, ₹2000 வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொங்கல் தொகுப்பு வழங்காமல் உள்ளனர். கட்டுமான தொழிலாளர்களின் சேமநலநிதி பல நூறு கோடி ரூபாய் இருப்பதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர். நிர்வாகிகள் பால்ராஜ், நடராஜன், முத்துகிருஷ்ணன், அஜீஸ் , செல்வராணி, வேலம், சிந்து உள்பட பலர் வந்திருந்தனர்.

The post கட்டுமான தொழிலாளர்களுக்கு ₹5 ஆயிரம், பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் சிஐடியு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CITU ,Nagercoil ,Kumari District Construction Workers Union ,Perumal ,Treasurer ,Rasal Anandaraj ,Tamil Nadu ,Welfare Board ,Dinakaran ,
× RELATED அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி போராட்டம்