மதுரை: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “சொர்க்கவாசல்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, OTTயில் வெளியீடு செய்ய தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்தது.
சிதர்த் விஷ்வநாத் எழுதி, இயக்கிய தமிழ் ஆக்சன்-கிரைம் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் செல்வராகவன், கருணாஸ், நத்ராஜ் சுப்ரமணியன், சனியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரைட் ஸ்வைப் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த படம் 2024 நவம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஒரு சாதாரண மனிதன், ஊழல் கொண்ட ஒரு அமைப்பினால் துரத்தப்பட்டு சிறைபெறுகிறான். சிறையில் அவன் மனதில் ஒரு ஆழ்ந்த உளப்போராட்டத்தை சந்திக்கிறார்: சிறைகள் உண்மையில் சிகிச்சை அளிப்பதற்கா, அல்லது மனிதர்களை குற்றத்தின் பள்ளத்தில் மேலும் ஆழமாக நழுவ வைக்கின்றதா? என்பதே முழு கதை யாகும்.
இந்நிலையில் சொர்க்கவாசல்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, OTTயில் வெளியீடு செய்ய தடை கோரி மனு அளித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்தனர். திரைப்படம் வெளியாக தடை கேட்பது இப்போது ஒரு பேஷனாக உள்ளது. படத்தை எடுத்துவிட்டு அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு மனுதாரருக்கு தெரியுமா. “வரலாறு தெரிந்தால் தான் எது தவறு எது சரி என முடிவு எடுக்க முடியும். வரலாறு தெரியாத பட்சத்தில் எவ்வாறு திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியும். ஒரு திரைப்படத்தில் சில கருத்துகள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானோர் அதை பார்க்கும் சூழலும் ஏற்படும். பொழுதுபோக்கு என அதை விட்டுவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும்.
நாடு முழுவதும் இப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
The post சொர்க்கவாசல் படத்தை OTTயில் வெளியீடு செய்ய தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை appeared first on Dinakaran.