×

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்

நாகப்பட்டினம்,டிச.27: நாகப்பட்டினம் தாலுகா பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் மற்றும் குதிரைகளை பிடிக்க கோரி ஆர்டிஓவிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய தலைவர் சுப்பரமணியன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று வந்தனர்.

ஆர்டிஓ அரங்கநாதனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாகப்பட்டினம் தாலுகாவிற்கு உட்பட்ட சங்கமங்கலம், பாலையூர், ஐவநல்லு£ர், சிக்கல், பொருள்வைத்தச்சேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பன்றிகள், குதிரைகள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகிறது. பன்றி, குதிரை வைத்திருப்பவர்களிடம் பலமுறை விவசாயிகள் எடுத்து கூறியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கவில்லை. எனவே ஆர்டிஓ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற ஆர்டிஓ அரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

The post விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,RTO ,Nagapattinam taluka ,Nagapattinam RTO ,Agricultural Workers Union District ,Murugaiyan ,Union Secretary ,Kumar ,Union ,President… ,Dinakaran ,
× RELATED திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில்...