- பொங்கல் திருவிழா
- ஆந்திரப் பிரதேசம்
- வேலூர்
- பொய்கை
- திருப்பத்தூர்
- ராணிப்பேட்டை
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
வேலூர், ஜன.1: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுசந்தையில் நேற்று ₹1 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை விற்பனை செய்ய விவசாயிகள் பெரும்பாலும் விரும்பவில்லை. இருப்பினும் கடந்த வாரத்தை விட பொய்கை மாட்டு சந்தைக்கு அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் விற்பனையும் களைக்கட்டியது. ₹1 கோடி வரை வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
‘வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பொய்கை கால்நடை சந்தைக்கு கடந்த சில வாரங்களாக வரத்து பாதியாக குறைந்து. பெரிய அளவில் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய விரும்பவில்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது. மாடுகள் வாங்க வரும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு மாடுகளை கேட்பதால் விற்பனைக்கு கொண்டு வரும் கால்நடைகளையும் விற்பனை செய்யாமல் விவசாயிகள் திரும்பி கொண்டு சென்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் இன்று(நேற்று) மாடுகள் அதிகளவில் வந்தது. இதனால் வர்த்தகம் ₹1 கோடி வரை நடந்தது. இனி வரும் வாரங்களில் மாடுகள் வரத்து அதிகரிக்கும்’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை: ஆந்திராவில் இருந்தும் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.