செங்கல்பட்டு: செங்கல்பட்டு குண்டூரில் வீட்டின் உரிமையாளர், அவரது சுயநலத்திற்காக வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்கி சுலபமாக செல்ல வீட்டின் எதிரே அடி பம்பை எனப்படும் கைப்பம்பை சிமென்டால் மூடிய தளம் அமைத்த வீட்டின் உரிமையாளர் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில், அனைத்து வார்டுகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த வார்டுகளிலும் ஒவ்வொரு தெருவிலும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் விதமாக அடி பம்ப் அமைக்கப்பட்டது.
அப்போதெல்லாம், இந்த இதுபோன்ற அடிபம்ப்புகள் மூலம்தான் தண்ணீர் வழங்கப்படும். எந்நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் 100அடி முதல் 200 அடிவரை பூமியில் குழாய் அமைத்து இந்ந அடிபம்ப் அமைக்கப்பட்டது.நாளடைவில் ஒவ்வொரு வீட்டிலும் போர் போட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து கொள்கிறார்கள். அதனால், இந்த அடிபம்ப்பை பயன்படுத்துவது குறைந்துபோனது. ஆனாலும், இன்றைக்கும் இந்த அடி பம்ப்பில் தண்ணீர் தடையில்லாமல் வருகிறது.
சாலையோரம் வசிப்பவர்கள் பிச்சை எடுத்து பிழைப்பவர்கள் இந்த அடி பம்ப்பை இன்னும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் தனது சுயநலத்திற்காக நேற்று காலை வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றிச்செல்ல ஏதுவாக சிமென்டினால் பாதிக்குமேல் பம்ப்பினை மூடி பம்ப்பின் கைப்பிடி மட்டும் தெரியும் அளவிற்கு மூடியுள்ள அவலம் அறங்கேறியுள்ளது. இதனை ஆய்வு மேற்கொண்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
The post வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க சிமென்ட் தளம் அமைத்து கைப்பம்பை மூடிய வீட்டின் உரிமையாளர்: நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.