×

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் ரயில்வே மேம்பால பணி 90 சதவீதம் முடிந்தது

*அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த வாக்குறுதி நிறைவேறுகிறது

போளூர் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் கடலுர் சித்துர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே காட்பாடி -விழுப்புரம் இடையேயான அகல ரயில்பாதை போளூர் நகர் வழியாக செல்கிறது. அடிக்கடி ரயில்கள் வந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் வேலூர், திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் சார்பில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் இருக்க ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போளூர் ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினார். ஆனால் 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ம் ஆண்டு ஒரு வழியாக பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்ததது.

இடையில் நில ஆர்ஜிதம் செய்வதில் வருவாய்த்துறை அலட்சியத்தின் காரணமாகவும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக போளூர் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில பேசினார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த பாலத்தை விரைவாக கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன்படி நில ஆர்ஜிதம் செய்வதற்கு தனது துறை சார்பில் ₹7 கோடி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை மூலம் வழங்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கட்டுமான பணியை காலதாமதமாக செய்து வந்த பழைய ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்து விட்டு புதிய நிறுவனத்தினிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நில ஆர்ஜிதம் செய்வது, மேலும் சர்வீஸ் சாலை அமைப்பது வடிநீர் கால்வாய் அமைப்பது, பாலத்தின் மேல்பகுதியில் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.7.38 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் கட்டுமான பணிகளை தொடங்கவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டு ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது.

நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் ரூ.27.85 ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து கூடுதல் நிதியாக ரூ.7.38 கோடி, நில ஆர்ஜிதம் செய்வதற்காக ரூ.7 கோடி, ரயில்வே துறை சார்பில் ரூ.4 கோடி என மொத்தம் ரூ.46.25 கோடி மதிப்பீட்டில் போளூர் ரயில்வே மேம்பால பணி ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைத்தல், சாலை குறியீடுகள், ரிப்ளக்டர்கள், போன்றவை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் இருபக்க மேம்பாலங்களுடன் இணைக்கும் இறுதி கட்ட பணிகள் நடந்து முடிந்து உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 7ம்தேதி போளூரில் நடந்த தாலுகா அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது பாலம் விரைந்து கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்த போது திமுக ஆட்சியில் தவறு ஏதுமில்லை. இந்த துறையில் பொறுப்பேற்ற உடன்முதல் கோப்பை பார்த்தேன்.

அதிமுக ஆட்சியால் செய்த தவறால் பாலம் கட்ட தாமதம் ஆனது. இதற்கான நடவடிக்கை எடுத்து பணிகள் விரைந்து முடித்து வரும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து பணிகளும் முடிவடைந்து போளூர் ரயில்வே மேம்பாலத்தில் எனது கார் ஓடும் என பேசினார்.

அவர் விழாவில் பேசியபடி அனைத்து பணிகளும் முடியும் கட்டத்தை நெருங்கி விட்டதால் ஜனவரி மாத இறுதிக்குள் போளூர் ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலை உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் ரயில்வே மேம்பால பணி 90 சதவீதம் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Minister ,VELU FULFILLS PROMISE ,BOLUR ,KADALUR SITHUR ROAD ,BOLUR CITY ,TIRUVANAMALAI DISTRICT ,Bolur Nagar ,Kathpadi ,Viluppuram ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...