×

வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய் ஸ்டைல்: சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்வது அவரது ஸ்டைல் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கலில் நேற்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டி: அதிமுக பலவீனப்பட்டால் பாஜ இரண்டாவது இடத்திற்கு வரும் என திருமாவளவன் கூறியுள்ளார். அது திருமாவளவன் கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. வீட்டிலிருந்து அரசியல் செய்வது தவெக தலைவர் விஜய் ஸ்டைலாகும். அதனை விமர்சிக்கவே முடியாது. இவ்வாறு தெரிவித்தார். மேலும், ‘தவெக உடன் கூட்டணி அமையுமா’ என்ற கேள்விக்கு ‘எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்றார்.

The post வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய் ஸ்டைல்: சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Dindigul Sinivasan ,Dindigul ,Daveka ,Dindigul Treasurer ,Thirumavalavan ,Adimuka ,Baja ,
× RELATED விஜய் ரசிகர்களிடம் ராஷ்மிகா மன்னிப்பு