- மன்மோகன் சிங்
- எம்பி இடைமுகம்
- கன்னிலாங்கி புகழ்
- மன்மோகன்சிங்
- புது தில்லி
- திமுகா
- சென்னை விமான நிலையம்
- கன்னலி பிரசாஞ்சலி
மீனம்பாக்கம்: புதுடெல்லியில் நேற்றிரவு மரணமடைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க, இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து திமுக எம்பி கனிமொழி விமானம் மூலமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற மற்றும் அவையின்மீது மிகப்பெரிய மரியாதை வைத்து பணியாற்றியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்று கனிமொழி எம்பி பேட்டியின்போது புகழஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் கனிமொழி எம்பி விமானம் மூலமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு கனிமொழி எம்பி பேட்டியளித்தார். அப்போது கனிமொழி எம்பி பேசுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மிகப்பெரிய ஜனநாயகவாதி. அவர், நாடாளுமன்றத்தின் மீதும் அவையின் மீதும் மிகச்சிறந்த மரியாதை வைத்து, பிரதமராக பணியாற்றியவர். மேலும், சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்த நிலையில், இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தி காப்பாற்றிய மிகப்பெரிய பொருளாதார நிபுணர். அவரது மறைவு, இந்திய நாட்டுக்கு பேரிழப்பு. அவரது இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கனிமொழி எம்பி புகழஞ்சலி செலுத்தினார்.
The post அவையின் மீது மரியாதை வைத்தவர் மன்மோகன் சிங்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி appeared first on Dinakaran.