×

தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் ஜனவரி மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு பில்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் வரும் ஜனவரி மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிவடிக்கை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கணினிமயமக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அரக்கோணம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சோதனை ஒட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் கண்டறியப்பட்டு அவற்றை சரி செய்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்தப்படும். பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பில் வழங்கப்படும் இதனால் தினமும் எவ்வளவு விற்கப்பட்டுள்ளது என தரவுகள் தெளிவாக கிடைக்கும். அதுமட்டுமின்றி இது கொண்டு வருவதால் தனியாக எதுவும் எழுதி வைக்க தேவையில்லை, அதற்கென தனி நபரை நியமிக்க அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக அந்த நபர் வேறு பணிகளை மேற்கொள்வார். இதுபோன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் ஜனவரி மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு பில்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,TASMAC ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!