- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை
- விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி
புதுகோட்டை,டிச.25: புதுக்கோட்டையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான முன்னேற்ற வழிகாட்டி கூட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி இணைந்து, அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர்கள், இயக்குனர்கள் மற்றும் தொகுப்பு அடிப்படையிலான வணிக அமைப்பு, ஆதார நிறுவனம் சார்ந்த அலுவலர்களுக்கு புதுக்கோட்டைவேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான முன்னேற்ற வழிகாட்டி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட வளர்ச்சி அலுவலர் (நபார்டு) தீபக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கியின் மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் துணை மேலாளர் விக்னேஷ் கலந்து கொண்டனர். வேளாண் வணிகத்துறை திட்டங்கள் பற்றி வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), எடுத்துரைத்தார். மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் மற்றும் மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் தொடர்பாக மாவட்ட வளர்ச்சி அலுவலர் பேசினார்.
அக்மார்க் தரச்சான்றிதழ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்கள் பற்றி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்), நிரஞ்சன், பேசினார். நபார்டு வங்கியின் மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் துணை மேலாளர் விக்னேஷ் வேளாண் விளை பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெறுவது தொடர்பாக எடுத்துரைத்தார். உணவு பதப்படுத்துதல் இயந்திரங்களுக்கான மானியம் தொடர்பான பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மற்றும் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் பற்றி அறந்தாங்கி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) கந்தகிரிவாசன் எடுத்துக் கூறினார்.வேளாண்மை அலுவலர் ஆலங்குடி.சுபாஷினி நன்றியுரை கூறினார்.
The post புதுக்கோட்டையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான முன்னேற்ற வழிகாட்டி கூட்டம் appeared first on Dinakaran.