திருப்போரூர்: கேளம்பாக்கம் கேளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு சுபத்ரா என்ற மனைவியும், சாய் தர்ஷன் (8), இஷாந்த் (4), ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில், மூத்த மகன் சாய் தர்ஷனுக்கு வாய்பேச முடியாத நிலை இருந்துள்ளது. கடந்த 23ம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற சாய் தர்ஷன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடினர். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறுவனின் படம் மற்றும் விவரங்களை பதிவிட்டு கண்டு பிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், நேற்று காலை கேளியம்மன் கோயில் குளத்தின் சிறுவன் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெற்றோரும், போலீசாரும் அங்கு சென்று சடலத்தை மீட்டு இறந்து கிடந்தது சாய் தர்ஷன் என உறுதி செய்தனர். பிரேத பரிசோதனைக்காக போலீசார் சடலத்தைக் கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post கேளம்பாக்கம் அருகே காணாமல்போன சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.