×

மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி அகத்திய பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அகத்தீஸ்வரர் கோயிலில், மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி அகத்திய பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்து கிளார் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர், தாயார் உலோப முத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அகத்திய மாமுனிவர் பிறந்த நட்சத்திரமான மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு, இக்கோயிலில் கடந்த 24ம்தேதி குருபூஜை விழா நடந்தது. விழாவில் அகத்திய பெருமாளுக்கும், தாயார் உலோப முத்திரை அம்மனுக்கும் 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிளார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி அகத்திய பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : 108 Sangabhishekam ,Agasthiya ,Perumal ,Margazhi Oilyam ,Kanchipuram ,108 Sangabhishekam ceremony ,Agasthiya Perumal ,Agasthiya temple ,Klar ,Saptha Rishis… ,
× RELATED மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி...