செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே கொண்டங்கி ஏரியில் பொதுமக்கள் வந்து குளித்து மகிழ்வது மினி குற்றாலம் போல் காட்சியளிக்கிறது. எனவே, அங்கு படகு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் மிகப்பெரிய பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுத்தமான சுகாதாரமான மூலிகை தன்மையுடன் கூடிய உபரிநீர் அருவிபோல ஊற்றுகிறது. இதனால், இங்கு குடும்பம் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து குதூகலமாக மகிழ்ந்துவரும் காட்சிகளை காண முடிந்தது.
இங்கு மழைகாலம் முடிந்து தண்ணீர் வற்றும் வரை தினமும் காலை முதல் மாலைவரை 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு வரும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 10 பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான கொண்டங்கி ஏரி. இந்த எரியில் குளிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஏரியில் தண்ணீரில் மரங்கள், செடிகள் ஏதும் இல்லாமல் கண்ணாடி போல் காட்சியளிப்பதால் போட்டிங் விட்டால் இது ஒரு மினி சுற்றுலா ஸ்தலமாகவும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post மினி குற்றாலமாக மாறிய கொண்டங்கி ஏரி: படகு விட கோரிக்கை appeared first on Dinakaran.