×

சீர்காழியில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவிப்பு

சீர்காழி,டிச.25: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் கொளஞ்சி, ராஜேந்திரன், தன்ராஜ், சுப்பிரமணியன், ஆசைத்தம்பி, அகிலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Liberation Tigers ,Tamil Nadu ,Stalin ,Periyar ,Sirkazhi, Mayiladuthurai district ,
× RELATED டாரஸ் லாரியை மறித்து பணம் பறித்தவருக்கு குண்டாஸ்