×

கத்தியுடன் சுற்றித்திரிந்த போதை வாலிபர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், அங்காள பரமேஸ்வரி கோயில் விளையாட்டு திடலில் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் சுற்றித்திரிவதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான தனிப்படை பிரிவு போலீசார், கோயில் விளையாட்டு திடலுக்கு சென்று கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர், முனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி பிரபாகரன் (எ) சுப்பு (30) என்பதும், இவர் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், என்ன காரணத்திற்காக இவர் கத்தியுடன் சுற்றி திரிந்தார், யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கத்தியுடன் சுற்றித்திரிந்த போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Sengunram police ,Angala Parameswari Temple ,Padiyanallur ,Sengunram ,Inspector ,Purushothaman… ,Dinakaran ,
× RELATED துணை முதல்வர் பிறந்தநாளில் பிறந்த...