×

வண்டலூரில் ரூ.6.36 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன பீல்டு ஆபீசர் கைது

கூடுவாஞ்சேரி: தாம்பரம் அடுத்த முடிச்சூர், மேற்கு லட்சுமி நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் சூரியபிரகாஷ் (24). இவர் வண்டலூரில் உள்ள ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் பீல்டு ஆபீசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சூர்யபிரகாஷ் தனது வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மொபைல் மூலம் ரசிதை போட்டு கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் கலெக்சன் செய்த பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் அவரே வைத்துக்கொண்டுள்ளார். இதில், 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தை நிதி நிறுவனத்திற்கு திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதனையடுத்து, நிதி நிறுவன மேலாளர் சுரேஷ் (34) என்பவர் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணத்திடம் புகார் செய்தார்.

புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் இருந்த சூரியபிரகாஷை கையும் களவுமாக பிடித்து வந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் மேற்படி தொகையை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் அவரே வைத்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் சூரியபிரகாஷை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அங்குள்ள கிளையில் சிறையில் அடைத்தனர்.

The post வண்டலூரில் ரூ.6.36 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன பீல்டு ஆபீசர் கைது appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Kuduvancheri ,Gurusamy ,Arignar Anna Street, West Lakshmi Nagar ,Mudichur, Tambaram ,Suryaprakash ,Sriram Financial Institution ,
× RELATED ஏரியில் கவிழ்ந்த சிமென்ட் லாரி : 3 பேர் உயிர் தப்பினர்