- எம்.ஜி.ஆர் நினைவு நாள்
- ராமநாதபுரம்
- முதல்வர் எம்.ஜி.ஆர்
- ராமநாதபுரம் மாவட்டம்
- தர்மராஜர்
- எம்.ஜி.ஆர்
- முதுகுளத்தூர்
- OPS
- தின மலர்
ராமநாதபுரம், டிச.25: ராமநாதபுரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் படத்திற்கு எம்.பி தர்மர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஓ.பி.எஸ் அணி ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர் கிழக்கு சேதுராமன், கடலாடி ராஜங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாள் பூப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலாடி பஸ் நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிக்கல் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் படத்திற்கு சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நகர செயலாளர் பால்பாண்டி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
The post எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.