×

தூத்துக்குடியில் செல்போன் பறித்து தப்பியவர் கைது

தூத்துக்குடி, டிச. 25: தூத்துக்குடி முகமது சாதலிபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48). இவர், கடந்த 5ம் தேதி இரவு சத்திரம் தெருவில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சண்முகசுந்தரம் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தூத்துக்குடி 1ம் ரயில்வே கேட் காசுக்கடை பஜாரை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சந்தானம் பாரத் (19) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து செல்போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் செல்போன் பறித்து தப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Shanmugasundaram ,Mohammed Satalipuram ,Chattiram Street ,
× RELATED நிலத்தை அபகரித்ததால் மூதாட்டியை கொலை செய்தேன்