×

கலெக்‌ஷன் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு: 3 பேர் கைது

மதுரவாயல்: மதுரவாயல் புது சுப்பிரமணியன் நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (30), பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு கடையில் கலெக்‌ஷன் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி, வெளியில் வசூல் செய்த ரூ.20 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு, பூக்கடை வெங்கடாசலம் முதலி தெரு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், ஹரி பிரசாத்தை தாக்கி, கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து ஹரி பிரசாத் அளித்த புகாரின் பேரில், பூக்கடை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தார். அதில், மாதவரம் பால் பண்ணை பச்சையப்பன் கார்டனை சேர்ந்த இதய கண்ணன் (21), மணலி சின்னசேக்காடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மகேஷ் (22), ஜாகிர் உசேன் 2வது தெருவை சேர்ந்த நரேஷ் (23) உள்பட 4 பேர் பணம் பறித்தது தெரிந்தது. இவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிறுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். கலெக்‌ஷன் ஊழியரை தாக்கி பணம் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கலெக்‌ஷன் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madhurayal ,Hari Prasad ,Madurawayal New Subramanian City ,Barimuna ,Dinakaran ,
× RELATED மாணவர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கம்!!