×

தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. மிகவும் முக்கியமான திருத்தங்களை மக்களின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் திருத்த முடியாது. தேர்தல் தொடர்பான முக்கிய தகவலை மக்களுக்கு வழங்குவதில்லை என்ற முக்கியமான முடிவை தன்னிச்சையாக எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்பு. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Congress ,Supreme Court ,Delhi ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள்...