×

பட்டாசு வெடிப்பதை தடுக்க கோரிக்கை

 

தொண்டி, டிச.24: புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது நடைபெறுகிறது. இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில தினங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. முன்பு நகரங்களில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம் இருந்தது. தற்போது கிராமங்களிலும் தொடர்ந்து விட்டது. நம்புதாளை,தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் டிச.31ம் தேதி நள்ளிரவில் அதிக சத்தம் தரக்கூடிய வெடிகளை வெடிக்கின்றனர்.

குடியிருப்பு பகுதியில் வெடிப்பதால் சிறு குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் தூக்கம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். கடந்த வருடம் இச்செயலால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டது. அதனால் போலீசார் முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறியது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பகலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்கின்றனர். ஆனால் புத்தாண்டின் போது நள்ளிரவில் வெடி வெடிப்பதால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் இது குறித்த அறிவிப்பை போலீசார் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என்றனர்.

The post பட்டாசு வெடிப்பதை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,New Year ,English New Year ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு...