பழநி, டிச. 24: பழநி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சார் ஆட்சியர் கிஷன்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, விவசாய நிலத்திற்கு செல்வதற்கான பாதை பிரச்னை, நீர் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
பின்னர் சார் ஆட்சியர் பேசுகையில், ‘விவசாயிகள் தங்களது பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகவே தெரிவிக்கலாம். இடைத்தரகர்களின் சென்று அவர்கள் மூலமாக வரவேண்டியதில்லை. அவர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டியதில்லை. விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் சரியானதாக இருந்தால் நிச்சயம் தீர்வு காணப்படும்’ என்றார். இதில் வருவாய், வேளாண் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post இடைத்தரகர்களை நாடாமல் விவசாயிகள் நேரடியாக குறைகளை சொல்லலாம்: பழநி கூட்டத்தில் சார் ஆட்சியர் அறிவுரை appeared first on Dinakaran.