×

கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 படகுகள் கடலில் கவிழ்ந்தது: பழவேற்காடு அருகே பரபரப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டை சுற்றி 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இதில், ஒரு தரப்பினர் பழவேற்காடு ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கோரைக்குப்பம் கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 படகுகள் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. தொடர்ந்து சக மீனவர்கள் உதவியுடன் மீனவர்கள் கரை திரும்பினர். அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்ததால் பழவேற்காட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.

கடல் சீற்றம் தொடர்பாக மீனவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும், மீன்வளத்துறை அதிகாரிகள் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக உரிய முறையில் மீனவர்களுக்கு சுற்றறிக்கை கொடுத்திட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 படகுகள் கடலில் கவிழ்ந்தது: பழவேற்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pazhaverkadu ,Ponneri ,Tiruvallur district ,Pazhaverkadu lake ,Bay of Bengal… ,
× RELATED பழவேற்காடு அருகே குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி