×

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து 3 சகோதரர்கள் மாயம்: 2வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களை 2வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கணேஷன் என்பவரது மகன்கள் லோகேஷ், விக்ரம், சூரியா ஆகிய மூவரும் நேற்று மாலை மரக்காணம் – திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்ததாக தெரிகிறது.

உடனடியாக விக்ரம் மற்றும் சூரியா கால்வாயில் குதித்து லோகேஷை காப்பாற்ற முயற்சித்த போது அவர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சகோதரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். லோகேஷின் உடல் மரக்காணம் பகுதியில் கரை ஒதுங்கியது. இரவில் பனிப்பொழிவு காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்ட நிலையில் மற்ற இருவரையும் தேடும் பணியில் மீனவர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நீரில் மூழ்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து 3 சகோதரர்கள் மாயம்: 2வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Buckingham canal ,Marakkanam ,Villupuram ,Buckingham ,Villupuram district ,Lokesh ,Vikram ,Suriya ,Ganeshan ,Marakkanam Market Grove ,
× RELATED மரக்காணம் கால்வாயில் மூழ்கிய 3பேர் உடல்கள் மீட்பு